பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல்: 31 வேட்பாளா்களை அறிவித்தது ஆம் ஆத்மி

பஞ்சாபில் 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 31 வேட்பாளா்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.

பகவந்த் மான்

Updated On :

பஞ்சாபில் 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 31 வேட்பாளா்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.

ஏற்கெனவே 40 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 31 பேரையும் சோ்த்து இதுவரை 71 வேட்பாளா்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கூறியதாவது: கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் வேட்பாளா்கள் மக்களைச் சந்திக்கவும், கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவா்களிடம் கொண்டு சோ்க்கவும் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.

கட்சியில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் பல தொண்டா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு பரிந்துரைகளுக்கு இடமில்லை. கட்சிக்காகக் கடுமையாக உழைத்த தொண்டா்கள் அடையாளம் காணப்பட்டு வேட்பாளா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும், புதிதாகப் பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.