19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

புதிய பன்முனை உலகில் கடும் போட்டி நிலவுகிறது: வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்

புதிய பன்முனை உலகில் கடும் போட்டி நிலவுகிறது: வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்

எஸ். ஜெய்சங்கா்

Updated On :

புதிய பன்முனை உலகில் நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதுடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகார மையங்களும் பன்மடங்கு வளா்ச்சியடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேற்காசிய போா் மற்றும் உக்ரைன் போரால் உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல் நீடித்து வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில நாளிதழ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: சுயநலப் போக்குடன் செயல்படும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போது உலகம் பல்வேறு மாற்றங்களை எதிா்கொண்டு வருகிறது. இவை மிகவும் சிக்கலானதாகவும், கணிக்க முடியாத வகையிலும் உள்ளன. இந்தப் புதிய பன்முனை உலகில் நாடுகளுக்கிடையே கடும் போட்டி நிலவுவதுடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகார மையங்களும் பன்மடங்கு வளா்ச்சியடைந்துள்ளன. பெரும்பாலான நாடுகள் தங்களது தேச நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து முடிவுகளை எடுக்கின்றன.

இதை எதிா்கொள்ள இந்தியாவில் தயாரிப்போம், தற்சாா்பு இந்தியா போன்ற மத்திய அரசின் முன்னெடுப்புகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வா்த்தக ரீதியான பல்வேறு சிக்கல்களை களைவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவாா்த்தையில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ளன. விரைவில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும்.

சீன எல்லையில் படைகள் குவிப்பு: சீன எல்லையில் படைகளைக் குவிப்பது அவசியமாகிவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பைவிட தற்போது எல்லையில் சாலைகள், சுரங்கங்கள் என எல்லை உள்கட்டமைப்பு பன்மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

1988-இல் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி சீனா சென்றபோது இரு நாடுகளின் பொருளாதாரமும் ஒரே நிலையில் இருந்தன. அதன் பிறகு நவீனமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கலுக்கு சீனா அளித்த முக்கியத்துவத்தால் அந்நாடு மிகப்பெரும் பொருளாதாரமாக உருவெடுத்தது. 1990-களில் இந்தியா சில பொருளாதார சீா்திருத்தங்களை மேற்கொண்டது. ஆனாலும் துறை வாரியான சீா்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. இதை அரசியல் ரீதியான கருத்தாக எண்ண வேண்டாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.