ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

மேக்கேதாட்டு திட்டத்தை காங்கிரஸ் ஒருபோதும் செயல்படுத்தாது: கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா

தமிழ்நாட்டில் உள்ள தங்கள் கட்சித் தலைவர்களையே சமாதானப்படுத்த தவறிய காங்கிரஸ் என கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருப்பது...

Ashoka said the Congress government in Karnataka would never implement the Mekedatu project

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா - படம்: ஏஎன்ஐ

Updated On :

பெங்களூரு: மேக்கேதாட்டு திட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டிய கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, தமிழ்நாட்டில் உள்ள தங்கள் கட்சித் தலைவர்களையே சமாதானப்படுத்த தவறிய காங்கிரஸ், திட்டத்தின் தாமதத்திற்கு மத்திய அரசை மட்டும் குறை கூறி வருவதாக விமரிசனம் செய்தார்.

பெங்களூருவில் உள்ள 'ஃப்ரீடம் பார்க்' பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். அசோகா, கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மேக்கேதாட்டு திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தாது. பாஜக ஆட்சியில் இருந்தபோது, ​​இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி டி.கே. சிவகுமார் பாதயாத்திரை மேற்கொண்டதாகவும், அந்த பாதயாத்திரை, இந்த திட்டத்தின் மீதான உண்மையான அக்கறையினால் நடத்தப்பட்டது அல்ல, மாறாகத் தேர்தலைக் கருத்தில் கொண்டே நடத்தப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை

காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்திய அசோகா, தாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதாக டி.கே. சிவகுமார் கர்நாடக மக்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும், இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தும், மாநில அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, 'ரகசியப் பதிவு நடவடிக்கைகள்' மற்றும் ஊழல் விவகாரங்களிலேயே மூழ்கியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களே எதிர்ப்பதாக சுட்டிக்காட்டிய அசோகா, தமிழ்நாட்டில் உள்ள தங்கள் கட்சித் தலைவர்களையே சமாதானப்படுத்த முடியாத கர்நாடக காங்கிரஸ், மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று எப்படி குற்றம் சாட்ட முடியும் என கேள்வி எழுப்பினார்.

ராகுல் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்

தமிழக காங்கிரஸ் தலைவர், இந்தத் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். இதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ராகுல் காந்தியை விமர்சித்த அசோக், மேக்கேதாட்டு திட்டம் குறித்து அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

மக்களின் முதுகில் குத்துவிட்டார்கள்

மேலும், மேக்கேதாட்டு திட்டம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் மூலம், சிவக்குமாரும் காங்கிரஸும் பழைய மைசூரு பகுதி மற்றும் பெங்களூரு மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டதாகவும், மக்களின் முதுகில் குத்துவிட்டதாக குற்றம் சாட்டியவர், கர்நாடக மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

மாநில அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும்

மேக்கேதாட்டு திட்டம் வனப்பகுதியில் அமையப்படுதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இத்தகைய கவலைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருவதாகவும், அனைத்துத் தரப்பினரையும் சமாதானப்படுத்த மாநில அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முரண்பாடான நிலைப்பாடு

கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் இந்த திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிப்பதாகக் கூறினாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, அந்த கட்சியின் முரண்பாடான நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.

பழி சுமத்துவதை நிறுத்துங்கள்

காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று கூறிய அசோகா, அந்த கட்சியால் தனது சொந்தக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் கூட தீர்க்க முடியாதவர்கள், மத்திய அரசு மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும் என்றார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால்...

மேலும், கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மேக்கேதாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியாகக் கூறினார்.

Ashoka said the Congress government in Karnataka would never implement the Mekedatu project, despite Chief Minister DK Shivakumar having previously led a padayatra demanding its implementation when the BJP was in power.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.