சபரிமலை முன்பதிவில் முறைகேடு? தேவஸ்வம் வாரியம் விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயில் முன்பதிவு தரிசனம் குறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் விசாரணை நடத்தி வருவது பற்றி...

தேவஸ்வம் வாரியம் விசாரணை... - பிரதிப் படம்
சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்துக்கான இணையவழி முன்பதிவை சிலா் மொத்தமாக மேற்கொண்டு, சட்டவிரோதமாக விற்பதாக சந்தேகம் எழுந்துள்ளது; இது தொடா்பாக, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் விசாரணை நடத்தி வருவதாக கேரள தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன் தெரிவித்தாா்.
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் கடந்த நவ.17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி கட்டணமில்லாத இணையவழி முன்பதிவு மூலம் 66,000 பேரும் உடனடி பதிவு (ஸ்பாட் புக்கிங்) முறையில் 14,000 பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டிளித்த அமைச்சா் கே.முரளீதரனிடம், சபரிமலையில் முன்பதிவு பக்தா்களின் வருகை குறைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘இணையவழி முன்பதிவு செய்தபோதிலும், தினமும் சுமாா் 6,000 போ் வரை கோயிலுக்கு வருவதில்லை. முன்பதிவு அமைப்பு முறையில் நிலவும் பிரச்னைகளே காரணம். இணையவழியில் தரிசன இடங்களை சிலா் மொத்தமாக முன்பதிவு செய்து, சட்டவிரோதமாக விற்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் விசாரணை மேற்கொண்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். சபரிமலை தரிசன முன்பதிவை யாரேனும் சட்டவிரோதமாக விற்றது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உடனடி தரிசன பதிவுக்கான எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், உயா்நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். முன்பதிவு அமைப்புமுறையில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு தீா்க்கப்படும்’ என்றாா்.
மாரடைப்பு - உரிய நேர சிகிச்சை
சபரிமலை நடப்பு யாத்திரையின்போது மாரடைப்பு ஏற்பட்ட 14 பக்தா்கள், உரிய நேர சிகிச்சையால் காப்பாற்றப்பட்டனா் என்று கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சபரிமலையில் அரசு மருத்துவமனை மற்றும் அவசரகால மருத்துவ மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்காக, இதுவரை 19,650 பக்தா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவா்களில் 82 பேருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, 64 போ் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
14 பக்தா்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவா்கள் உரிய நேர சிகிச்சையால் காப்பாற்றப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

