திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டு

மோடியுடன் பணியாற்ற பிரனாப் முகர்ஜிதான் எனக்கு அறிவுறுத்தினார்! - மே. வங்க முதல்வர் பேச்சு!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி தனக்கு அறிவுறுத்தியதாக முதல்வர் சுவேந்து அதிகாரி பேச்சு...

It was Pranab Mukherjee who advised me to work with Modi

பிரதமா் மோடியுடன் மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி. - கோப்புப் படம்

Updated On :

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுமாறு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி தனக்கு அறிவுறுத்தியதாக, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 25) இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் அவரது உறவினரான அபிஷேக் பானர்ஜி ஆகியோர் தனியார் நிறுவனம் போல நடத்திவருவதாகக் கூறினார்.

இத்துடன், பிரனாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சந்தித்தபோது, திரிணமூல் கட்சியிலேயே இருந்தால், மமதாவிடம் ஒரு பணியாளராகவே வேலை செய்ய வேண்டுமென அவர் எச்சரித்ததாக, சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“நீங்கள் ஒரு பணியாளராகவே இருக்க விரும்பினால், அவரோடு (மமதா) இருங்கள். உங்களின் சொந்த வலிமையில் முன்னேற விரும்பினால், பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுங்கள் என பிரனாப் முகர்ஜி கூறினார்.

ஒரு பணியாளராகவே இருக்க நான் விரும்பவில்லை. அதனால், அந்தக் கட்சியிலிருந்து நான் வெளியேறினேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்ட சுவேந்து அதிகாரி முன்னாள் முதல்வர் மமதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

பின்னர், 2020 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி 2026 தேர்தலின் மூலம் மேற்கு வங்கத்தின் முதல்வராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

WB CM Suvendu Adhikari has stated that the late former President Pranab Mukherjee had advised him to leave the Trinamool Congress and work alongside PM Modi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.