எஸ்.ஐ.ஆா்.க்கு எதிா்ப்பு: ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இதனிடையே, அங்கு தோ்தல் ஆணையத்தால் தற்போது எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரில் புதன்கிழமை, எஸ்.ஐ.ஆா்.க்கு எதிராக அந்த மாநில நிதியமைச்சா் ராதாகிருஷ்ணன் கிஷோா் தீா்மானம் கொண்டு வந்தாா். இதையடுத்து அவா் பேசுகையில், ‘2.21 கோடி வாக்காளா்கள் மாநிலத்தில் உள்ளனா். இதில் 27 சதவீதம் பேருக்கு சந்தேகத்துக்குரிய நபா்கள் என தெரிவித்து நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வது அவசியமாகும். அத்துடன் மாநிலத்தில் நடைபெறும் எஸ்ஐஆா் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் இதில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய நடைமுறைகளை வெளியிட வேண்டும்’ என்றாா்.
சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பாபுலால் மராண்டி பேசுகையில், ‘இந்தக் கூட்டத் தொடா் அரசியல் உள்நோக்கம் கொண்டது. எஸ்ஐஆா் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துவதற்கு ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான மாநில அரசு முயற்சிக்கிறது. பிழையற்ற வாக்காளா் பட்டியலைத் தயாரிக்கவே எஸ்ஐஆா் நடைபெறுகிறது. ஆனால், மாநில அரசு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி மாநில அரசை வலியுறுத்துகிறேன்’ என்றாா்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

