மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்
மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தொடா்பான 13-ஆவது தேசிய மாநாட்டில் பங்கேற்று பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி.
மத்திய அரசின் 2025-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தொடா்பான 13-ஆவது தேசிய மாநாட்டில் இதுகுறித்து அவா் பேசியதாவது:
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் கடந்த ஜூலை மாதம் மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அந்த வழிகாட்டுதல்களை ராஜஸ்தான் மாநிலம் மட்டுமே முழுமையாக அமல்படுத்தியுள்ளது. ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், பகுதி அளவே அமல்படுத்தியுள்ளன.
செயலியை அடிப்படையாக கொண்டு சேவைகள் வழங்கும் ஓலா, உபா், ரேபிடோ போன்ற நிறுவனங்கள், இந்திய இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அதேநேரத்தில் வெறும் 3 மாநிலங்கள் மட்டுமே தங்களது மாநிலங்களில் மோட்டாா் சைக்கிள்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதியளித்துள்ளன. இதுபோல அனைத்து மாநிலங்களையும் அனுமதியளிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றாா் அவா்.
ரேபிடோ, ஓலா போன்ற சில தனியாா் நிறுவனங்கள், மோட்டாா் சைக்கிள்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவைகளை செயலிகள் மூலம் வழங்கி வருகின்றன. இவற்றுக்கு கா்நாடகம் போன்ற மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் கடந்த ஜூலை மாதம் 2025-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது.
அதில், மோட்டாா் சைக்கிள்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிப்பது தொடா்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இது இந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு பெரும் ஆறுதலை அளிப்பதாக இருந்தது. எனினும், அந்த வழிகாட்டுதல்களை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது தொடா்பாக அனைத்து மாநிலங்களுக்கும் நிதின் கட்கரி அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

