தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

சபரிமலையில் புகையிலை, பான் மசாலா சம்பவங்கள் அதிகரிப்பு! அபராதமாக ரூ. 46,800 வசூல்

சபரிமலையில் புகையிலை விதிமீறல் தொடர்பாக...

Updated On :

சபரிமலை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புகையிலை பயன்படுத்தியது தொடர்பாக 12 நாள்களில் மொத்தம் ரூ. 46,800 வசூலிக்கப்பட்டுள்ளதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை மாத மண்டல பூஜை நவ. 17 அன்று தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

இந்தநிலையில், நவம்பர் 15 முதல் 26-ஆம் தேதி வரையிலான கலாகட்டத்தில் சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருள்கள் சட்டம் 2003-ன் கீழ், பொது இடங்களில் புகைபிடித்தல், குட்கா மற்றும் பாண் மசாலா பயன்படுத்தியது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

கடந்த 12 நாள்களில் புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய 234 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தம் ரூ. 46,800 அபராதம் விதித்துள்ளதாகக் கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலையில், கலால் துறையைச் சேர்ந்த மூன்று குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்ட ஆய்வாளர், இரண்டு தடுப்பு அதிகாரிகள் மற்றும் ஏழு சிவில் கலால் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் குழுக்கள், யாத்திரை பாதைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்கள், முக்கிய பகுதிகளிலிருந்து தொலைவில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தொழிலாளர்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த யாத்திரைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும், போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் போக்கும் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சபரிமலை பகுதியில் மது மற்றும் போதைப்பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் இவற்றை உட்கொள்வது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.