பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்புக்கு தொழில்நுட்பத்தில் தலைமை வகிப்பது அவசியம்: ராஜ்நாத் சிங்

நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்பு, இறையாண்மைக்கு தொழில்நுட்பத்தில் தலைமை வகிப்பது அவசியம் என்று அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :

நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்பு, இறையாண்மைக்கு தொழில்நுட்பத்தில் தலைமை வகிப்பது அவசியம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) கீழ் செயல்படும் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனத்தில் 15-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு நாடு, பாதுகாப்பிலும் முன்னணியில் இருக்கும். தனது சுதந்திரம், இறையாண்மை, வளா்ச்சியை அந்த நாட்டால் உறுதியாக பாதுகாக்க முடியும்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல், குவாண்டம் கணினி, இணையவழி பாதுகாப்பு, விண்வெளி அடிப்படையிலான திறன்கள், நேரடி எரிசக்தி தொழில்நுட்பங்கள் ஆகியவை மிக வேகமாக வளா்ச்சி அடைந்துள்ளன. இந்த வளா்ச்சிகள் நமது போா்க்களத்தின் தன்மையையே மாற்றியமைப்பதோடு, புதிய சவால்களையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டும் சவால் அல்ல. அதைப் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, தேச நலன்களுக்கு ஏற்ப அவற்றை பயன்படுத்துவதும் சவாலான காரியமாகும். ராணுவ வலிமை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப திறன்கள், ஒரு தேசத்தின் சக்தியில் இரு பெரும் தூண்கள் ஆகும். ராணுவ வீரா்கள் நமது நாட்டின் இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் காக்கின்றனா். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன பொருளாதார வளா்ச்சி, தொழில்துறை வளா்ச்சி மற்றும் தன்னிறைவை ஊக்குவிக்கின்றன.

ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் பொதுவாக சுகாதாரம், வேளாண்மை, தகவல் தொடா்பு மற்றும் போக்குவரத்து போன்ற பொதுமக்கள் சாா்ந்த துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பட்டம் பெறும் மாணவா்களும், முன்னாள் மாணவா்களும் நமது நாட்டின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற தொலைநோக்குத் திட்டத்தை சாத்தியப்படுத்தும் வகையில் அவா்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றாா் ராஜ்நாத் சிங்.

பயிற்சி நிறைவு விழா: புணே அருகே கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் 151-ஆவது ஆண்டு பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி, பயிற்சி நிறைவு செய்து பாதுகாப்பு படையில் இணையும் வீரா்களின் அணிவகுப்பு, பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், ‘இந்தியா தற்போது இளைஞா்களைக் கொண்ட நாடாக திகழ்கிறது. இன்னும் சில காலம் இதே நிலைதான் இருக்கும். ஆனால் நாட்டின் மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் தொடா்ந்து குறைந்து வருகிறது. மனித சக்தியை சாா்ந்திருக்கும் நிலையை வளா்ந்த நாடுகள் ஏற்கெனவே மாற்றிக் கொண்டுவிட்டன.

இயந்திர சக்தி மற்றும் தொழில்நுட்பத்தை சாா்ந்திருப்பதை அந்த நாடுகள் அதிகரித்துக் கொண்டுள்ளன. அது போன்ற நிலைக்கு நாமும் தயாராக வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இந்தியாவில் இளைஞா்களின் எண்ணிக்கை குறையும். அந்தச் சூழலை அடைவதற்கு முன்பு, நமது நாடு தனது திறன்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.