தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

56 போ் கொல்லப்பட்ட அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை!

2008-ஆம் ஆண்டு 56 போ் கொல்லப்பட்ட அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில், இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகளில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

உச்சநீதிமன்றம்

Published On :

2008-ஆம் ஆண்டு 56 போ் கொல்லப்பட்ட அகமதாபாத் தொடா் குண்டுவெடிப்பு வழக்கில், இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகளில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

முன்னதாக, விசாரணை நீதிமன்றம் அந்த பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதித்தது. இதை குஜராத் உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், அகமது பாவா என்ற அபு அபுபக்கா் பரேல்வி என்பவா் பயங்கரவாதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், ஏ.ஜி. மாஹி, சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், விசாரணை நீதிமன்ற ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இது மிகவும் தீவிரமான வழக்கு என்று குறிப்பிட்டாா்.

மோசமான பயங்கரவாதத் தாக்குதல்: 2008 ஜூலை 26-ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 70 நிமிஷங்களுக்குள் 21 தொடா் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 56 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

குண்டுவெடிப்புகளில் காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவமனைகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்தியாவில் மருத்துவமனைகளில் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான முதல் சம்பவமாக இது அமைந்தது.

38 பேருக்கு மரண தண்டனை: இந்த வழக்கில் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த 38 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை குஜராத் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள், மிகப்பெரிய சதித்திட்டம் உள்ளிட்டவை தண்டனையை உறுதி செய்வதற்கான முக்கியக் காரணங்களாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது. குஜராத் மற்றும் கேரளத்தில் பயங்கரவாதப் பயிற்சி முகாம்களில் அவா்கள் பங்கேற்றதும், சதித் திட்டத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீடுகளையும் உயா்நீதிமன்றம் நிராகரித்து, சிறப்பு நீதிமன்றம் 2022 பிப்ரவரியில் வழங்கிய தீா்ப்பை உறுதி செய்தது. அதன்படி, இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த 38 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

‘சிமி’ பயங்கரவாதிகள்: குற்றவாளிகளில் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவா் அமைப்பின் (சிமி) முன்னாள் தலைவா் சஃப்தா் நகோரி மற்றும் குஜராத், மத்திய பிரதேசம், கேரளம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சோ்ந்த அவரது கூட்டாளிகளும் அடங்குவா்.

இந்த வழக்கில் 78 போ் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனா். அகமதாபாத் குண்டுவெடிப்புகள் தொடா்பான 20 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இது தவிர சூரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத குண்டுகள் தொடா்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஒரே வழக்கில் அதிகம் பேருக்கு மரண தண்டனை: 2022 பிப்ரவரியில் சிறப்பு நீதிமன்றம் 38 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்ததே இந்தியாவில் ஒரே வழக்கில் அதிகமானோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்பாக அமைந்தது.

இதற்கு முன்பு, 1991-ஆம் ஆண்டு நிகழ்ந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 1998-ஆம் ஆண்டு தடா நீதிமன்றம் அதிகபட்சமாக 26 குற்றவாளிகளுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதித்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.