அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

தில்லியில் 43-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் பலி!

தில்லியில் 43வது மாடியில் இருந்து இளைஞர் குதித்து இளைஞர் பலியானது பற்றி...

பலியான இளைஞர். - Screengrab |X

Updated On :

தில்லியில் 43-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியின் நொய்டா செக்டார்-94-ல் உள்ள கட்டடத்தின் 43-வது மாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், 29 வயது இளைஞர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீஸார், பலியானவர் ஹரியாணாவின் மானேசர் பகுதியைச் சேர்ந்த சம்பவ் ஜெயின் என அடையாளம் கண்டனர்.

இச்சம்பவம் தொடர்பான விடியோக்கள் கைப்பேசிகளில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஜெயின் ஒருநாள் தங்குவதற்காக தனியாக வந்திருந்ததாகக் போலீஸார் கண்டறிந்தனர்.

அவர் கீழே குதித்து பலியாவதற்கு முன், பால்கனியின் தடுப்புச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காவல் அதிகாரிகளும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, தேவையான ஆதாரங்களைச் சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக அதிகாரி கூறினார்.

பலியானவர் மன அழுத்தத்தில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளின்படி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

Summary

Sambhav Jain, a Manesar resident, had checked in alone for a one-day stay; police are reviewing CCTV footage and other evidence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.