மோசமான சாலை: தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி!

மோசமான சாலை காரணமாக கர்ப்பிணி பெண் தற்காலிகத் தொட்டில் மூலம் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டது பற்றி...

Pregnant woman carried on 'bahangi' as damaged road prevents ambulance from reaching Jharkhand village

தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி.

Published On :

ஜார்க்கண்டில் கிராமத்தில் மோசமான சாலை காரணமாக கர்ப்பிணி பெண் தற்காலிகத் தொட்டில் மூலம் முக்கியசாலைக்குத் தூக்கிச் செல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் உள்ள குனியா கிராமத்தைச் சேர்ந்த ஹிரா குமாரி என்ற கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருந்தனர்.

அப்போது, சேறும் சகதியுடனும், பெரிய குழிகளுடனும் காணப்பட்ட சாலையைக் கடக்க முடியாது என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, கிராம மக்கள் இரண்டு பேரின் உதவியுடன் அப்பெண்ணைக் கிராமத்திலிருந்து முக்கிய சாலை வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தற்காலிகத் தொட்டில் மூலம் தூக்கிச் சென்றனர்.

அதன் பிறகு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் கும்லா சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மழையின் காரணமாகச் சாலை மேலும் சேதமடைந்துவிட்டதாகவும், இதனால் வாகனங்கள் கிராமத்திற்குள் வருவது கடினமாகிவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

விரைவில் சாலையின் நிலைமை மேம்படுத்தப்படவில்லை என்றால், அவசர காலங்களில் தீவிர நோயாளிகளையோ அல்லது கர்ப்பிணி பெண்களையோ உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது பெரும் சிரமமாக மாறிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

Summary

A pregnant woman had to be carried to the main road on a 'bahangi' (a makeshift sling carrier) after an ambulance could not reach her village in Jharkhand's Gumla district due to the poor condition of the road.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.