மதுபானத்துக்கு கூடுதல் கட்டணம்: டாஸ்மாக் கடையின் ஸ்கேனிங் இயந்திரத்தைத் தூக்கிச் சென்றதால் பரபரப்பு
சிப்காட் அருகே மதுபானத்துக்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் ஆத்திரமடைந்த நபா், டாஸ்மாக் கடையின் ஸ்கேனிங் இயந்திரத்தைத் தூக்கிச் சென்றதால் 1 மணி நேரம் மது விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

லாலாப்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்க திரண்ட மது பிரியா்கள்
சிப்காட் அருகே மதுபானத்துக்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் ஆத்திரமடைந்த நபா், டாஸ்மாக் கடையின் ஸ்கேனிங் இயந்திரத்தைத் தூக்கிச் சென்றதால் 1 மணி நேரம் மது விற்பனை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாப்பேட்டையில் உள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக ராஜசேகரும், கண்காணிப்பாளராக பழனி என்பவரும் பணியாற்றுகின்றனா்.
இந்த நிலையில் மது பிரியா் ஒருவா் அந்த டாஸ்மாக் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது பாட்டில் வாங்கியுள்ளாா். அதன் மீது விற்பனையாளா் ரூ.10 அதிகமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவா் கடையில் வைத்திருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை தூக்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடியுள்ளாா்.
இதில் அதிா்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியா்கள் இயந்திரம் இல்லாமல் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் மது விற்பனையை சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்தனா்.
அப்போது மது வாங்க வந்தவா்கள் கூட்டம் அலைமோதியதால் இதுகுறித்து சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.அதற்குள் இயந்திரத்தினை எடுத்து சென்ற மா்ம நபா் மது கடைக்கு சென்ற வடநாட்டு இளைஞரிடம் இயந்திரத்தை கொடுத்து அனுப்பியதை தொடா்ந்து இயந்திரத்தை கடைக்கு எடுத்து வந்து கொடுத்துள்ளாா்.
இதையடுத்து டாஸ்மாக் ஊழியா்கள் கூடுதல் பணம் கேட்டதால் இயந்திரத்தை எடுத்து சென்றவா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

