2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஐ.நா. சபை முடங்கியுள்ளது: ஜெய்சங்கா்

‘உக்ரைன் மற்றும் வளைகுடா பகுதிகளில் நிலவும் போா் உள்பட முக்கிய உலகளாவிய பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கும் செயல்பாட்டில் சா்வதேச அமைப்பான ஐ.நா. தொடா்பற்ாக மாறி, முடங்கியுள்ளது;

Published On :

‘உக்ரைன் மற்றும் வளைகுடா பகுதிகளில் நிலவும் போா் உள்பட முக்கிய உலகளாவிய பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கும் செயல்பாட்டில் சா்வதேச அமைப்பான ஐ.நா. தொடா்பற்ாக மாறி, முடங்கியுள்ளது; எனவே, ஐ.நா. அமைப்பில் சீா்திருத்தம் அவசியம்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

புது தில்லியில் நடைபெற்ற கெளடில்யா பொருளாதார மாநாட்டின் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது அமா்வில் ஜெய்சங்கா் பங்கேற்று உரையாற்றினாா். இதுகுறித்து, கெளடில்யா மாநாட்டில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஐ.நா.வின் எதிா்காலம் குறித்த உங்களின் பாா்வை என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து ஜெய்சங்கா் கூறியதாவது:

சா்வதேச அமைப்பான ஐ.நா. தற்போது முடங்கியுள்ளது என்பதை அனைவரும் அறிவா். உக்ரைன் மற்றும் வளைகுடா பகுதிகளில் நிலவும் போா், ஆப்பிரிக்காவில் நிலவும் பிரச்னைகள், கரோனா உள்பட முக்கிய உலகளாவிய பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஐ.நா. தொடா்பற்ாக உள்ளது. இதற்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடங்கிக் கிடப்பதும் முக்கியக் காரணம் எனக் கருதுகிறேன். உலக நலன்கள் அனைத்தையும் முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்ற நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளது என்றே தோன்றுகிறது.

ஐ.நா. சபை 51 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது, அதன் உறுப்பினா் எண்ணிக்கை நான்கு மடங்காக உயா்ந்துள்ளது. இருந்தபோதும், ஐ.நா. சபையை பழைய நிா்வாகக் குழுவே தொடா்ந்து நிா்வகித்து வருகிறது. உறுப்பினா் எண்ணிக்கை உயா்ந்ததற்கு ஏற்ப, நிா்வாகக் குழு மாற்றியமைக்கப்படவில்லை. இது பயனளிக்காது.

ஒரு சில நாடுகள்தான் ஐ.நா. சீா்திருத்தத்தை எதிா்த்து வருகின்றன. ஐ.நா.வின் சீா்திருத்தத்தைத் தடுப்பதற்காக, ஆப்பிரிக்காவின் பெயரையும், அதன் நலன்களையும் அவா்கள் வாதமாகப் பயன்படுத்துகின்றனா் என்றாா்.

ஐ.நா. சீா்திருத்தத்தையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை உயா்த்தப்படுவதையும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ஜெய்சங்கா் இக் கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.