மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு! இந்தியா கூட்டணி நாளை மீண்டும் போராட்டம்!

இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

India protest against gyanesh kumar

மகாத்மா காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள்... - PTI

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் நாளையும் (அக். 8) தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதையடுத்து, 3 ஆவது நாளாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியின் ராஜ பாதையில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,

“இந்தப் போராட்டம் நாளையும் தொடரும். ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் இந்தியா கூட்டணியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

ஞானேஷ் குமாரைப் பாதுகாக்க வேண்டுமென அவரது எஜமானர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி செய்தால், அவருடன் சேர்ந்து அவர்களும் மூழ்கடிக்கப்படுவார்கள். நாங்கள் உறுதியுடன் முன்னேறி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.6) நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் புதன்கிழமை போராட்டம் நடத்த முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களை தில்லி காவல் துறை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

protest by INDIA bloc MPs against CEC Gyanesh Kumar will continue tomorrow as well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.