மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! முர்முவைச் சந்திக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்!

ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி குடியரசுத் தலைவர் முர்முவை இன்றிரவு இந்தியா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு...

INDIA bloc leaders

குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்... - கோப்புப் படம் | PTI

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்றிரவு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ் ஐ ஆர்) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி கடந்த 3 நாள்களாக தில்லியில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், வாக்குத் திருட்டு மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி இன்று (அக். 9) இரவு 8 மணிக்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் முர்முவை நேரில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, மார்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இந்த விவகாரம் குறித்து கடந்த அக்.2 ஆம் தேதி குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்திக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் நேரம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

leaders of the INDIA alliance parties are set to meet President Droupadi Murmu tonight to demand the resignation of CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.