லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

தில்லியில் போர்ப் பதற்றச் சூழல்; ஆர்.எஸ்.எஸ். களமிறக்கம்! - பெ. சண்முகம் குற்றச்சாட்டு!

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தில்லியில் போர்ப் பதற்றச் சூழல் நிலவுவதாக பெ. சண்முகம் பதிவு...

cpim p shanmugam

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், தில்லியில் போர்ப் பதற்றச் சூழல் நிலவி வருவதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் பெ. சண்முகம் பதிவிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை (அக்.10) தில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், சிஜேபியின் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன், போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தில்லியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் தில்லியில் போர்ப் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், ஆர்.எஸ்.எஸ். களமிறக்கப்பட்டுள்ளதாகவும், பெ. சண்முகம் இன்று (அக். 9) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“நான் இப்போது புதுதில்லியில் இருக்கிறேன். தில்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுகிறது. நம்நாட்டு மாணவர்கள் - இளைஞர்கள் மீது யுத்தத்தை தொடுக்க பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.

வாக்குத் திருடன் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்க அவரால் பயனடைந்த மோடி – அமித்ஷா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல் தீவிரமாக களமிறங்கியுள்ளது. நாளை களத்தில் சந்திக்க இருக்கிறோம். போராடுவது அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்வோம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Summary

CPIM has posted that a tense, war-like atmosphere prevails in Delhi due to the announced protest against CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.