சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

சிஜேபி போராட்டம் எதிரொலி! எப்படியிருக்கிறது தலைநகரம்?

சிஜேபி போராட்டம் எதிரொலி காரணமாக தலைநகர் தில்லியின் தற்போதைய நிலைமை

new delhi railway station

புதுதில்லி ரயில் நிலையம் - ANI

Published On :

புது தில்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் தலைநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைமுறையில் மாற்றம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புது தில்லியில் இன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்துள்ளது.

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் சாலையில் இறங்கிப் போராடி, மத்திய கல்வித்துறை அமைச்சரைப் பதவி விலக வைத்த நிலையில், ஒரு சில மாதங்களில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது.

புது தில்லியில் இன்று மக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்லும் சாலைகள் மூடப்பட்டு, ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுளள்ன.

சிஜேபி போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ள நிலையில், தலைநகர் புது தில்லி போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

டிரோன்கள் பல இடங்களில் பறக்கவிடப்பட்டு நிலைமையை காவல்துறை கண்காணித்து வருகிறது. சாலை முழுவதும் தடுப்புகளும் கயிறுகளும் கொண்டு முடக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தொடர்ந்து ஒலிப்பெருக்கிகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் கூடும் அளவுக்கு வசதி கொண்ட ஜந்தர் மந்தரில் ஒருவர் கூட நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும், முடிந்தால் பங்கேற்கலாம் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.