செய்யறிவுக்கு செம டஃப்! ஆன்மிக, ஜோதிட செயலிகளுக்கு அதீத மவுசு!
ஆன்மிக, ஜோதிட செயலிகளுக்கு அதீத மவுசு ஏற்பட்டிருப்பதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.

ஜோதிட செயலி - ani
நாடு முழுவதும் ஒருபக்கம் செய்யறிவு, சூப்பர் நுண்ணறிவு என பறந்துகொண்டிருக்கும் அதே வேளையில், மறுபக்கம் மக்கள் இன்றைய நாள் எப்படி இருக்கும்? பைபிள் விளக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள ஆன்மிக, ஜோதிட செயலிகளை அதிகம் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கிறார் என்ற தரவுகளும் வெளியாகியுள்ளன.
என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், இன்றைய நாள் எப்படி இருக்கும்? எதிர்காலம் எப்படியிருக்கும்? பைபிள் விளக்கம்? மெக்கா செல்வதற்கான வழிமுறைகள்? என பலவற்றையும் மக்கள் தேடுவதும், அறிந்துகொள்ள விரும்புவதும் குறையவில்லை.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஜோதிடம், ஆன்மிகம் தொடர்பாக 30 கோடி பேர் தங்களது செல்போன்களில் செயலிகளை பதிவிறக்கம் செய்திருப்பதாக ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவல் தெரிவிக்கிறது.
அது மட்டுமில்லையாம், ஏராளமான இந்தியர்கள் இந்த செயலிகளில் அதிக நேரத்தை செலவிடுவதாகவும் கடந்த காலங்களில் 5.8 நிமிடங்கள் வரை நேரத்தை செலவிட்டு வந்த நிலையில் தற்போது 8 நிமிடங்களுக்கு மேல் உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகறிது.
இதனோடு, ஏஐ மூலம் இயங்கும் ஜோதிட செயலிகளுக்கும் அதிக வரவேற்பு உள்ளதாம். என்னதான் செய்யறிவை நோக்கி உலகம் நகர்ந்தாலும், மக்களின் ஜோதிட ஆன்மிக நம்பிக்கைகள் குறையாது என்பதையே இது நிரூபிப்பதாகக் கருதப்படுகிறது.
Summary
tough to AI Spiritual astrological apps are in huge demand
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

