"வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை
தில்லியில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக வதந்திகளை பரப்பிய மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பகிரப்பட்ட 300 பதிவுகளை நீக்க நகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக வதந்திகளை பரப்பிய மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பகிரப்பட்ட 300 பதிவுகளை நீக்க நகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின்போது பெண் பத்திரிகையாளரை காவல் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தவதாக சித்தரிக்கும் புனையப்பட்ட காணொலியை பரப்ப செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகளைப் பயன்படுத்தியதாக 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கைதுக்கு சில தினங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நதீம் அகமது என அடையாளம் காணப்பட்ட நபர், காவலர் ஒருவரை ஆட்சேபகரமான முறையில் சித்தரிக்கும் காணொலியை தயாரித்து பரப்பியதாக கண்டறியப்பட்டு அந்தப் பதிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்புடைய பெண் பத்திரிகையாளர்களால் காவல் துறையினருக்கு எதிராக சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து தனியாக நகர காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஆட்சேபத்துக்குரிய மற்றும் தவறாக வழிநடத்தப்படும் உள்ளடங்களை நீக்கக் கோரி எக்ஸ் சமூக ஊடக தளத்துக்கு தில்லி காவல்துறை மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
இத்தகைய தவறான மற்றும் வதந்தி பரப்பும் நபர்களை காவல்துறையின் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு கண்காணித்து வருவதாகவும் தொடர்புடைய நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

