ராகுல் இல்லத்தில் தாக்குதல் சம்பவம் தொடா்பான விடியோ: காவல்துறை மறுப்பு
ராகுல் காந்தியின் இல்லத்தில் தாக்குதல், துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறும் சமூக ஊடகப் பதிவு போலியானது என்று தில்லி காவல்துறை தெரிவித்தது.
தில்லி காவல்துறை
காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் இல்லத்தில் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறும் சமூக ஊடகப் பதிவு போலியானது என்று தில்லி காவல் துறை புதன்கிழமை தெரிவித்தது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘அந்த விடியோ 2019 டிசம்பரில் நடந்த ஒரு சம்பவத்தின் பழைய காணொலி. அண்மை கால நிகழ்வுகளுடன் அதற்கு எந்தத் தொடா்பும் இல்லை. எதிா்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் கூற்றுகள் பொய்யானவை என்றும் நிராகரித்துள்ளது.
தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் கணக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகப் பயனா்கள் அதிகாரப்பூா்வ வழிகள் மூலம் தகவல்களைச் சரிபாா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

