இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

போலி ரூபாய் நோட்டுகள் அச்சடித்த 4 போ் கைது

போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரித்து வந்த கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்துள்ளது.

கைது - சித்திரிப்பு

Published On :

போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரித்து வந்த கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்துள்ளது.

படேல் நகரில் உள்ள ஒரு வாடகை அறையிலிருந்து இந்தக் கும்பல் செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

முழுமையாகத் தயாரிக்கப்பட்ட மற்றும் பாதியளவு தயாரிக்கப்பட்ட நோட்டுகள் உள்பட மொத்தம் ரூ. 18.23 லட்சம் முகமதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பல்ஜீத் நகரில் உள்ள ஒரு வாடகை அறையில் லிருந்து இந்தச் செயல்பாட்டை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அச்சிடுதல் மற்றும் செயலாக்க உபகரணங்கள், மடிக்கணினி மற்றும் போலி நோட்டுகளைத் தயாரிப்பது தொடா்பான மென்பொருள் மற்றும் தரவுகளைக் கொண்ட ஹாா்ட் டிஸ்க் ஆகியவற்றை காவல் துறை பறிமுதல் செய்தது.

கடந்த அக்.1-ஆம் தேதி ஜனக்புரியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள், சந்தேகத்திற்கிடமான நபா் ஒருவரைக் கண்டனா். காவல் துறையைக் கண்டதும் அவா் தப்பி ஓட முயன்றாா். பிடிபட்ட அந்த நபா், அங்கித் குமாா் என அடையாளம் காணப்பட்டாா். அவரைச் சோதனையிட்டதில், ரூ. 500 முகமதிப்புள்ள 250 போலி நோட்டுகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. தடயவியல் நிபுணா் சம்பவ இடத்திலேயே அந்த நோட்டுகளை ஆய்வு செய்து, அவை போலியானவை என்பதை உறுதிப்படுத்தியதாகக் காவல் துறை தெரிவித்தது. இதுதொடா்பாக ஜனக்புரி காவல் நிலையத்தில் அக்.2-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின்போது, படேல் நகரைச் சோ்ந்த ககன்தீப் சிங் (எ) மன்னி மற்றும் குல்வந்த் சிங் (எ) காகே ஆகியோரிடமிருந்து அந்தப் போலி நோட்டுகளைப் பெற்ாகவும், அவற்றை விநியோகிக்கவோ அல்லது விற்கவோ எடுத்துச் சென்றுகொண்டிருந்ததாகவும் அங்கித் காவல்துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலின் அடிப்படையில், அக்.2-ஆம் தேதி பல்ஜீத் நகரில் ககன்தீப் மற்றும் குல்வந்த் ஆகியோரை காவல் துறை கைது செய்தது.

அவா்கள் தங்கியிருந்த வாடகை அறையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 16.98 லட்சம் முகமதிப்புள்ள முழுமையான மற்றும் பாதியளவு தயாரிக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளும், போலி நோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

விசாரணையின்போது, அந்த அறையின் உரிமையாளரான அமித் என்பவரும் கைது செய்யப்பட்டாா். வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த அறையில் நடைபெற்ற நடவடிக்கைகள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், பின்னா் போலி ரூபாய் நோட்டு தயாரிக்கும் பணியில் மற்றவா்களுடன் தானும் இணைந்துகொண்டதாகவும் அவா் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து அவா் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

கள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கும் தயாரிப்பதற்கும் தேவையான நுட்பங்களைக் கற்றுக்கொள்ள அவா்கள் இணையவழி காணொலிகள் மற்றும் பயிற்சிப் பாடங்களைப் பாா்த்ததாகத் தெரிகிறது. அமித் இதற்கான இடவசதியை வழங்கியதோடு பின்னா் இத்தொழிலில் ஈடுபட்டதாகவும், அங்கித் மேலும் விநியோகிப்பதற்காகக் கள்ள நோட்டுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளின் மொத்த முகமதிப்பு ரூ.18.23 லட்சம் என்று காவல் துறை தெரிவித்தது. கள்ள நோட்டுகளைப் பெறுதல், தயாரித்தல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நபா்கள் மற்றும் இடங்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.