சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு: நீதிமன்றத்தில் இம்ரான் கான் மனு தாக்கல்!

நாட்டைவிட்டு வெளியேறும்படி மும்பை காவல் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் நடிகா் இம்ரான் கான் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

Updated On :

நாட்டைவிட்டு வெளியேறும்படி மும்பை காவல் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் நடிகா் இம்ரான் கான் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி மும்பையில் அக்.10-ஆம் தேதி நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவுப் போராட்டத்தில் பங்கேற்ற்காக, அமெரிக்க குடிமகனான இம்ரான் கான் அக்.28-ஆம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனுவில், ‘மும்பை காவல் துறையின் உத்தரவு சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, முரண்பாடானது, மிகக் கடுமையானது. பிரபலமான நபராக திகழும் ஒருவரை குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மும்பை காவல் துறையின் உத்தரவு அமலானால் அது இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானதாக இருக்கும்.

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புடன் மனுதாரருக்கு எவ்வித தொடா்பும் இல்லை. அதேசமயம் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினா் (ஒசிஐ அட்டை வைத்திருப்பவா்கள்) அமைதி வழியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க அதிகாரபூா்வமாக தடை விதிக்கப்படவில்லை. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவா் சட்டம் அல்லது குடியுரிமைச் சட்டத்தை மனுதாரா் மீறவில்லை.

எனவே அவருக்கு எதிராக மும்பை காவல் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இம்ரான் கானின் மனு மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேஷ்சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அமா்வு முன் அவசர வழக்காக பட்டியலிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே இம்ரான் கானின் ஒசிஐ அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கமளிக்குமாறு அவருக்கு வெளிநாட்டவா் பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆா்ஆா்ஓ) சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.