சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ரயிலில் ஸ்பீக்கரில் செல்போனா? அபராதம், சிறை நிச்சயம்!

ரயில் பயணங்களின்போது செல்போன் ஸ்பீக்கரில் அதிக ஒலியுடன் ஆடியோ கேட்பதற்கும், வீடியோக்கள் பார்ப்பதற்கும் தடை விதித்துள்ளது தொடர்பாக...

mobile phone speakers in trains will now be punishable with fines

ரயில்களில் செல்போன் ஸ்பீக்கரில் ஆடியோ, வீடியோ பார்ப்பதற்கும் தடை - முக நூல்

Updated On :

சென்னை: ரயில் பயணங்களின்போது செல்போன் ஸ்பீக்கரில் அதிக ஒலியுடன் ஆடியோ கேட்பதற்கும், வீடியோக்கள் பார்ப்பதற்கும் தடை விதித்துள்ள தெற்கு ரயில்வே, மீறுவோருக்கு ரூ. 5,000 அபராதத்துடன் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ரயில் பயணங்களின்போதும், ரயில் நிலையங்களில் இருக்கும்போதும் செல்போன்கள் மூலம் உரத்த குரலில் பேசுவது, அதிக ஒலியுடன் இசை, உரையாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இது அருகில் இருக்கும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவாகவும், பயணத்தைச் சீர்குலைப்பதாக இருக்கும் என்பதால், இத்தகைய செயல்களுக்கு ரயில்வே திருத்தச் சட்டத்திற்கு இணங்க அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த 16 ஆம் தேதி தெற்கு ரயில்வே அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ரயில்களிலோ ரயில் நிலையங்களிலோ செல்போன்கள் மூலம் அதிக ஒலியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்க்கக் கூடாது என பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், விதிகளை மீறுவோருக்கு ரயில்வே சட்டப் பிரிவு 145-இன் கீழ் ரூ.5,000 வரை அபராதமும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து ரயில் நிலையங்கள், ரயில்களில் அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த விழிப்புணர்வு வாசகம் இந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் இருக்கும். ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துமாறும், உரத்த குரலில் பேசும் தொலைபேசி அழைப்புகளை தவிர்க்குமாறும் பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

மேலும், சக பயணிகளுக்கு இடையூறு செய்வதைத் தவிர்க்க, தொலைபேசி உரையாடல்களை மிதமான ஒலியளவில் வைத்துக்கொள்ளுமாறும் மற்றும் ஆடியோ கேட்கும்போது அல்லது வீடியோக்களை பார்க்கும்போதும் இயர்போன்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அவர்கள் ரயிலிலிருந்தோ அல்லது ரயில் நிலையத்திலிருந்தோ வெளியேற்றப்படலாம் என்று எச்சரித்துள்ள தெற்கு ரயில்வே, மீண்டும் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதமும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், அபராதம் விதிக்கும் அதிகாரம் ரயிலில் பணியில் இருக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் வணிகப் பிரிவின் மூத்த அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்களை ரயில் பெட்டியிலிருந்து வெளியேற்றவும் பொதுவான விதி ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் செல்போன்கள் மூலம் உரத்த குரலில் பேசுவது, அதிக ஒலியுடன் இசை, உரையாடல்கள் கேட்பது, வீடியோ பார்ப்பது பகிர்வது தற்போது பெருகி வருவதாகவும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவசியமாக்கியுள்ளது என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Southern Railway has asked its divisions to sensitise passengers against loud phone conversations and playing music or videos on speaker mode in trains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.