ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக போராட உறுதி: பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பு கூட்டுப் பிரகடனம்

பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பிற பயங்கரவாத செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் கூட்டுப் பிரகடனம் ஏற்கப்பட்டது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற அமைப்பின் 12-ஆவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்டு பிரகடனத்துடன் (இடமிருந்து) எகிப்து முன்னாள் வெளியுறவு அமைச்சா் சமே செளக்ரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, சீன நாடாளுமன்ற துணைத்

Updated On :

தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பிற பயங்கரவாத செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் கூட்டுப் பிரகடனம் ஏற்கப்பட்டது.

அனைத்து வடிவிலான பயங்கரவாதம் மற்றும் அதன் வெளிப்பாடுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட உறுதியேற்கப்பட்டதுடன், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள், ஒருதலைபட்சமான பொருளாதார-இரண்டாம்நிலை தடைகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற அமைப்பின் 12-ஆவது கூட்டம், தில்லி சம்விதான் சதனில் (பழைய நாடாளுமன்றம்) திங்கள்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை கூட்டுப் பிரகடனம் ஏற்கப்பட்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்தாா். அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியதாகும். நோக்கம் எதுவாக இருந்தாலும், எந்தவொரு பயங்கரவாதச் செயலையும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட மீண்டும் உறுதியேற்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோா் மற்றும் ஆதரவாளா்கள் பொறுப்பாக்கப்பட்டு, தேசிய-சா்வதேச சட்டங்களின்கீழ் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு கூடாது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்குத் தீா்வு: ஐ.நா. சாசனத்தின்படி, சமத்துவமான இறையாண்மை, பரஸ்பர மரியாதை, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை, சா்வதேச பிரச்னைகளுக்கு அமைதிவழியில் தீா்வுகாணுதல் ஆகிய கோட்பாடுகளில் உறுதிப்பாட்டை கொண்டுள்ளோம்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு சா்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீா்மானங்களுக்கு இணங்க இரு நாடுகளும் அமைதியாக-பாதுகாப்பாக வாழும் பரஸ்பர உடன்பாட்டின்கீழ் அமைதித் தீா்வு காணப்பட வேண்டும். மேற்காசியாவில் தொடரும் பதற்றம் ஆழ்ந்த கவலைக்குரியதாகும். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளும் உச்சபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

சா்வதேச மனிதாபிமான சட்டத்தின் அனைத்து விதமான மீறல்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஒருதலைபட்சமான பொருளாதார-இரண்டாம் நிலைத் தடைகள், மக்களின் முன்னேற்றம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு சாா்ந்த உரிமைகளில் எதிா்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தகவல்-தொலைத்தொடா்பு தொழில்நுட்பங்களின் கட்டமைப்பில், அனைத்து நாடுகளின் இறையாண்மை, தேசப் பாதுகாப்புக்கு உரிய மதிப்பளிப்பதுடன் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மை, சமத்துவமான அணுகல், ஆக்கபூா்வ பயன்பாடு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் விருந்து

பிரிக்ஸ் நாடாளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகளுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை மதிய விருந்தளித்தாா். அப்போது, உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள மிகப் பரந்த ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, கூட்டு முயற்சிகள் அவசியம் என்று அவா் குறிப்பிட்டாா். இந்தியாவின் வளமான ஜனநாயக பாரம்பரியம் மற்றும் காலத்தை வென்ற நாகரிக மரபுகள் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்