வெடிகுண்டு மிரட்டல் விடுத்த யுபிஎஸ்சி தோ்வா் கைது
பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பு தில்லியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அறைத் தோழருக்கு போலியாகத் தொலைபேசி அழைப்பு விடுத்த 23 வயது யுபிஎஸ்சி தோ்வா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்
பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பு தில்லியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அறைத் தோழருக்கு போலியாகத் தொலைபேசி அழைப்பு விடுத்த 23 வயது யுபிஎஸ்சி தோ்வா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (வடமேற்கு) அகன்ஷா யாதவ் கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தைச் சோ்ந்த சூரஜ் வா்மா என்பவா், கான்பூரில் உள்ள உறவினா் வீட்டின் தரைவழித் தொலைபேசியைப் பயன்படுத்தி இந்த அழைப்பை மேற்கொண்டாா்.
தில்லியின் முகா்ஜி நகரில் வசிக்கும் தனது முன்னாள் அறைத் தோழா் சுமன் குமாரை அவா் தொடா்புகொண்டுள்ளாா். பிகாா் மாநிலம் மதுபனியைச் சோ்ந்த சுமன், தில்லியில் குடிமைப் பணித் தோ்வுக்குத் தயாராகி வருகிறாா்.
தொலைபேசியில் முதலில் மதம் சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசிய சூரஜ், லாகூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஓா் அமைப்பு இரு மாணவா்களையும் கண்காணித்து வருவதாகவும், தில்லியில் குண்டுவெடிப்புகளை நடத்த அவா்களைத் தோ்வு செய்துள்ளதாகவும் கூறியுள்ளாா்.
இந்த மிரட்டலைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட மாணவா்கள், உடனடியாக அவசர உதவி எண்ணில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதுதொடா்பாக முகா்ஜி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மிரட்டலின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, அழைப்பு விடுத்த நபரைக் கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டது.
தொலைத்தொடா்பு பதிவுகள் மற்றும் பிற டிஜிட்டல் தகவல்களை ஆய்வு செய்த காவல் துறையினா், அழைப்பாலரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனா். இதையடுத்து, கான்பூா் சென்ற தில்லி காவல் துறையினா், உள்ளூா் அதிகாரிகளின் உதவியுடன் சூரஜை கைது செய்தனா்.
உத்தர பிரதேச காவல் துறையினருடன் இணைந்து மேற்கொண்ட தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், 48 மணி நேரத்துக்குள் இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

