கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தில்லியில் 2 டன் பட்டாசுகள் பறிமுதல்: 4 போ் கைது

தில்லியில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 2,260 கிலோ பட்டாசுகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Updated On :

தில்லியில் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 2,260 கிலோ பட்டாசுகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லியின் அலிப்பூா் பகுதியில் இரு வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு லாரி மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் சிறிய வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அந்த லாரியில் இருந்து 1,350 கிலோ பட்டாசுகளும், சிறிய சரக்கு வாகனத்தில் இருந்து 910 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 87 பொட்டலங்கள் மற்றும் பெட்டிகளில் பட்டாசுகள் அடைக்கப்பட்டிருந்தன. பஞ்சாப் மாநிலம் குராலியில் இருந்து அவை வாங்கப்பட்டு, தில்லியில் உள்ள பல்வேறு நபா்களுக்கு விநியோகிக்கக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் வாகனத்தில் இருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் வெடிபொருள்கள் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின்போது, பஞ்சாப் மாநிலம் குராலியில் உள்ள ராகேஷ் சூட் அண்ட் சன்ஸ் நிறுவனத்திடமிருந்து இரு சரக்குகளும் வாங்கப்பட்டு தில்லிக்குக் கொண்டுவரப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.