ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு கொலை மிரட்டல்!

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து...

Union Minister Chirag Paswan

மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான் - கோப்புப்படம்

Published On :1 செப்டம்பர் 2026, 7:22 pm IST

மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு இன்று (செப். 1) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு செல்போன் எண்கள் அடங்கிய பெயர் குறிப்பிடப்படாத கடிதம் ஒன்று அமைச்சரின் அலுவலகத்துக்கு இன்று வந்ததாகவும் அதில் சிராக் பாஸ்வான் பயங்கரவாதிகளால் விரைவில் கொல்லப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சிராக் பாஸ்வானின் கூடுதல் தனிச் செயலாளரான அலோக் குமார் சிங் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவைக்கேற்றார்போல் அதிகரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிராக் பாஸ்வானுக்கு ஏற்கெனவே ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Chirag Paswan, the Union Minister of Food Processing Industries and leader of the Lok Janshakti Party (Ram Vilas), received a death threat today (Sept. 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.