
என்ஜின் கோளாறு! அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
கோவாவில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது பற்றி...
இண்டிகோ விமானம் - கோப்புப் படம்
தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம், என்ஜின் கோளாறு காரணமாக சில நிமிடங்களிலேயே மீண்டும் கோவாவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
கோவா மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.16 மணியளவில் இண்டிகோவின் 6E 2102 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது.
சுமார் 229 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை கவனித்த விமானிகள், மீண்டும் கோவாவில் அவசர தரையிறக்கத்துக்கு காலை 9.25 மணியளவில் அனுமதி கோரினர்.
இதனைத் தொடர்ந்து கோவா விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், காலை 9.50 மணியளவில் இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானத்தை சோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
விமானத்தில் எழுந்த தொழில்நுட்பக் கோளாறு ஆய்வு செய்யப்பட்டு, முழு சோதனைக்குப் பிறகு மீண்டும் விமானம் புறப்படும் என்றும், பயணிகளின் சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை விசாரணை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Engine trouble! IndiGo flight makes emergency landing!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




