சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஜல் வாரிய ஊழல் வழக்கு: சத்யேந்தர் ஜெயினுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

தில்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது பற்றி..

corruption case

சத்யேந்தர் ஜெயின் - DPS

Updated On :

தில்லியில் ஜல் வாரியம் தொடர்பான ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லியின் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சத்யேத்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி திக்பினய் சிங் வாய்மொழியாக வழங்கிய சுருக்கமான உத்தரவில் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றம் ரூ. 2 லட்சத்திற்கான தனிநபர் பிணைப்பத்திரம் மற்றும் அதே தொகைக்கான இரண்டு நபர் பிணையங்களை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டார். இருப்பினும் விரிவான காரணங்கள் அடங்கிய எழுத்துப்பூர்வமான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை.

சத்யேந்தர் ஜெயின் ஜல் வாரியம் தொடர்பான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 19 முதல் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

தில்லி நீர் வழங்கல் துணை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்தபோது யூரோடெக் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான வழக்கு இதுவாகும்.

தில்லி ஜல் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான ஒப்பந்த நடைமுறைகளில் பெரிய அளவிலான முறைகேடுகள், ஒப்பந்த நிபந்தனைகளில் மாற்றம் மற்றும் குற்றவியல் சதி ஆகியவை நடந்ததாகக் கூறி, கண்காணிப்பு இயக்குநரகம் அளித்த புகாரின் அடிப்படையில் மே 2024-ல் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

A Delhi court on Thursday granted bail to AAP leader and former Delhi minister Satyendar Jain in a corruption case involving the Delhi Jal Board.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.