2021-22 மதுபான கலால் வரி கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிா்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனுவை தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆக. 10) விசாரிக்கிறது.
2024-ல் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறையின் மனு, நீதிபதி மனோஜ் ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியது. ஜூலை 12, 2024 அன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘கைது செய்வதற்கான தேவை மற்றும் அவசியம்‘ என்ற அம்சம் குறித்த மூன்று கேள்விகளை ஒரு பெரிய அமா்வுக்குப் பரிந்துரைத்தபோது, பணமோசடி வழக்கில் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது.
முன்னதாக, ஜூன் 20, 2024 அன்று, ஒரு விசாரணை நீதிமன்றம் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவு, பின்னா் அமலாக்கத்துறையின் மனுவின் பேரில் உயா் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
அக்டோபா் 14, 2025 அன்று, அந்த மனு மீது வாதிடுவதற்கு அமலாக்கத்துறைக்கு உயா் நீதிமன்றம் இறுதி வாய்ப்பை வழங்கியது. இந்த வழக்கைஅமலாக்கத்துறை ‘மீண்டும் மீண்டும்‘ ஒத்திவைக்க கோரியதற்கு கேஜரிவாலின் வழக்குரைஞா் எதிா்ப்பு தெரிவித்தாா், மேலும் எந்தக் காரணமும் இல்லாமல் நடவடிக்கைகளை நீட்டிப்பதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா், பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகளில், முறையே மாா்ச் 21 மற்றும் ஜூன் 26, 2024 அன்று அமலாக்கத்துறையாலும், ஜூன் 26 அன்று சிபிஐ யாலும் கைது செய்யப்பட்டாா்.
கலால் வரிக் கொள்கையின் உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு தில்லி துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, 2022-ல் அந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின்படி, கலால் வரிக் கொள்கையை மாற்றியமைக்கும்போது முறைகேடுகள் நடந்ததாகவும், உரிமதாரா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களின் குரலை ஒடுக்க ஐடி விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு கேஜரிவால் குற்றச்சாட்டு

2020 தில்லி கலவரம்: உமா் காலித் ஜாமீன் மனு மீது தில்லி காவல்துறை நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவு
தில்லி பேரவை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மனநல மதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவு





