அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!

நாசிக்கில் பழங்குடியின மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அபிஜீத் தீப்கே பங்கேற்பு...

CJP Founder Abhijeet Dipke visited tribal students in Nashik

மகாராஷ்டிர பழங்குடியின மாணவர் போராட்டத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே... - Instagram/CJP

Published On :3 செப்டம்பர் 2026, 8:33 pm IST

மகாராஷ்டிரத்தில், 12 ஆவது நாளாக உண்ணாவிரதம் கடைபிடித்து வரும் பழங்குடியின மாணவர்களின் போராட்டத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில், பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 588 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், படுக்கை வசதிகளின்றி தரையில் உறங்கவைத்ததால் பாம்புகள் கடித்து 3 மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று மகாராஷ்டிரத்தின் பழங்குடியின வளர்ச்சித் துறை அமைச்சர் அசோக் வூயிகே, செயலர் விஜய் வாக்மாரே மற்றும் ஆணையர் லீனா பன்சோத் ஆகியோர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாசிக்கில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் கடந்த 12 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இத்துடன், இந்தப் போராட்டத்தில், மகாராஷ்டிர அரசின் மாணவர் விடுதிகளில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாசிக் பழங்குடியின மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (செப். 3) அந்தப் போராட்டத்தில் பங்கேற்று போராட்டக்காரர்களுடன் உரையாடியுள்ளார்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி தலைமையில் நடைபெற்ற போராட்டம் நாடு முழுவதும் ஆதரவு பெற்று மாபெரும் போராட்டமாக உருவானதைத் தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Abhijit Deepke, founder of the CJP has participated in the protest by tribal students in Maharashtra, who have been on a hunger strike for the 12th day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.