
சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் மூலம் காங்கிரஸ் கட்சி வாக்காளர்கள் பெயர்களை அழிக்க பாஜக சதி செய்வதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்
தெலங்கானாவில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் பாஜக அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து வாக்காளர்களின் பெயரை நீக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
கோடங்கல் பகுதியில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "சிறப்புத் தீவிர திருத்தப் பணி என்ற பெயரில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க மத்திய அரசு சதி செய்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை அவர்கள் குறிவைத்துள்ளனர்.
மகாராஷ்டிரம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாஜக இதே உத்தியைக் கையாண்டது. இப்போது, தெலங்கானாவிலும் அதனைச் செயல்படுத்த முயல்கிறது.
மக்களின் வாக்குகளை பாஜக நீக்க நினைத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின வாக்காளர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்றவற்றை அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்திய பாஜக, ஏழை மக்களின் வாக்குகளை நீக்க சிறப்புத் தீவிர திருத்தத்தைப் பயன்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
தெலங்கானாவில் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடைபெற்று வரும் சூழலில் முதல்வர் ரேவந்த் ரெட்டி இவ்வாறு பேசியுள்ளார்.
Summary
BJP plotting to erase Congress votes through a special intensive revision: Revanth Reddy alleges!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





