FOLLOW US

ON GOOGLE DISCOVER

கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் 35 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்த சகோதரர்கள்!

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் 35 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சதோதரர்கள் இருவர் ஒன்று சேர்ந்த உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

35 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சதோதரர்கள் இருவர் ஒன்று சேர்ந்த உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Published On :5 செப்டம்பர் 2026, 8:29 pm IST

ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணியால் 35 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சதோதரர்கள் இருவர் ஒன்று சேர்ந்த உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாபில் 35 ஆண்டுகளாக வசித்து வரும் சீதாராம் என்பவர் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காக பழைய பள்ளிச் சான்றிதழைப் பெறுவதற்குத் தனது சொந்த கிராமமான ஹரியானாவில் உள்ள மனோஹர்பூருக்குச் சென்றுள்ளார்.

மாற்றுத்திறனாளியான சீதாராம் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி பஞ்சாபுக்குச் சென்றார். பல ஆண்டுகளாக வெவ்வேறு இடங்களில் பணியாற்றிய அவர், ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி இறுதியில் ’குரூப் - டி’ பிரிவில் அரசு வேலையைப் பெற்றார்.

சீதாராம் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில், ஊழியர்கள் அவரது சான்றிதழ் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த கிராமத்தில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு பேசினர்.

அவ்வாறு பேசுகையில், அந்தத் தகவல் இறுதியில் அவரது சகோதரர் கிருஷ்ணாவைச் சென்றடைந்துள்ளது. சீதாராமை 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடி வந்த நிலையில், அவர் பள்ளியில் இருப்பதை அறிந்த அவரது சகோதரர் கிருஷ்ணா ஆச்சரியத்துக்குள்ளாகினார்.

உடனடியாக, வாக்குச்சாவடி நிலைய அதிகாரியைத் தொடர்புகொண்டு சீதாராம் தனது இளைய சகோதரர்தான் என உறுதிப்படுத்திய அவர், பள்ளிக்கு விரைந்தார்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக் கொண்ட நிலையில், ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கண்ணீர் விட்டனர். சீதாராம் தனது மூத்த சகோதரர் கிருஷ்ணாவின் காலில் விழுந்து வணங்கி உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

பின்னர், இருவரும் ஒன்றாக இணைந்து ஸ்கூட்டரில் கிருஷ்ணாவின் வீட்டிற்குச் சென்றனர். 35 ஆண்டுகாலப் பிரிவு எதிர்பாராமல் முடிவுக்கு வந்தது இருவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

கூடுதல் உதவித் தேர்தல் பதிவு அதிகாரி ரமேஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றிப் பேசுகையில், “இது ஒரு மறக்க முடியாத அனுபவம். வாக்காளர் சரிபார்ப்புப் பணியாகத் தொடங்கிய இது, 35 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த இரு சகோதரர்களை ஒன்று சேர்ப்பதில் முடிந்துள்ளது” என்றார்.

Summary

An emotional incident has occurred where two brothers, separated for 35 years, were reunited thanks to the special intensive voter list revision drive.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.