காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய இளைஞருக்கு நெதர்லாந்து சூழலியலாளரிடமிருந்து அழைப்பு!

தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய இளைஞருக்கு டட்ச் சூழலியலாளரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது பற்றி..

Pittu Singh, a student, cleaned the river all by himself.

தனியாக ஆற்றைச் சுத்தம் செய்த மாணவன் பிட்டு சிங். - படங்கள்: இன்ஸ்டா / கெவின் பீட்டர்சன், பிட்டு சிங்.

Published On :5 செப்டம்பர் 2026, 4:29 pm IST

மாசுபட்டிருந்த அஜ்னர் ஆற்றை தனியொரு ஆளாக சுத்தப்படுத்திய இந்திய இளைஞருக்கு, நெதர்லாந்து சுற்றுச்சூழலியலாளரிடமிருந்து வேலைக்கான அழைப்பு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு சிங் என்ற 20 வயது பிஎஸ்சி படிக்கும் இளைஞர் தனியாளாக ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அஜ்னர் ஆற்றைச் சுத்தம் செய்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்தன.

கடந்த ஒரு சில மாதங்களாக, தனியொரு ஆளாக, இந்த ஆற்றில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் பிட்டு. சுத்தப்படுத்துவதற்கு முந்தைய புகைப்படும், பிறகான புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

ஆற்றைச் சுத்தம் செய்வதில் பல மாதங்களைச் செலவிட்ட இளைஞருக்கு, நெதர்லாந்து நாட்டுச் சூழலியலாளர் ஒருவரிடமிருந்து வேலைக்கான அழைப்பு வந்துள்ளது. அதில், வாருங்கள், எங்களுக்காக வந்து பணியாற்றுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். பிட்டு இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சிலரோ, இதுபோன்ற இளைஞர்களை இந்தியா இழந்துவிடக் கூடாது, இந்திய சுற்றுச்சூழல் அமைப்பு அல்லது மாநில அரசுகள் முன்வந்து இளைஞருக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.