
பணக்கார விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடி காப்பீடு!
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடியில் காப்பீடு எடுக்கப்பட்டது குறித்து...
விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடி காப்பீடு - GSB Seva Mandal
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடியில் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.
செப். 14 ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவிருக்கிறது. வட மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படும்.
மகாராஷ்டிரத்திலும் வெகு விமரிசையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும்நிலையில், மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் ஆண்டுதோறும் ஜிஎஸ்பி சேவா மண்டல் பிரமாண்ட விநாயகர் சிலை அமைத்து, 5 நாள்களுக்கு விழா நடத்தும்.
இதன்படி, ஜிஎஸ்பி சேவா மண்டல் 72-வது ஆண்டாக நடத்தப்படவிருக்கும் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு, ரூ. 703.27 கோடிக்கு காப்பீடு எடுத்துள்ளது. கடந்தாண்டில் விநாயகர் சிலைக்கு ரூ. 474 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்ட நிலையில், தற்போது தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததால், காப்பீடு தொகையின் மதிப்பும் உயர்ந்ததாகத் தெரிவித்தனர்.
கோடிக்கணக்கான மதிப்பில் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவதாலும், காப்பீடு எடுக்கப்படுவதாலும், இந்த விநாயகரை பணக்கார விநாயகர் என்றும் சிலர் அழைக்கின்றனர்.
இதுகுறித்து, விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறியதாவது, கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்படும் பிரமாண்ட விநாயகர் சிலைக்கு பக்தர்கள் காணிக்கை அளித்த 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி, நவரத்தினக் கற்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படவுள்ளன.
விழாவின்போது விநாயகர் சிலைக்கு அதிக மதிப்பிலான ஆபரணங்களும் பொருள்களும் பயன்படுத்தப்படுவதால், விநாயகர் சிலை மற்றும் அதன் தொடர்புடைய பாதுகாப்பு, அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு என மொத்தம் ரூ. 703.27 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாள்தோறும் 40,000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் இந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, 474 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுக்கப்பட்டது. தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததால், காப்பீடு தொகையின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Summary
GSB Seva Mandal’s Maha Ganapati idol in Mumbai gets Rs 703 crore insurance cover
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







