
நிகழாண்டு 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழியிலிருந்து விலக்கு: சிபிஎஸ்இ பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கைப்படி, நிகழாண்டு மும்மொழிகளை கற்பதில் இருந்து 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்றம்
சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கைப்படி, நிகழாண்டு மும்மொழிகளை கற்பதில் இருந்து 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.
கடந்த ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 இந்திய மொழிகள் உள்பட மூன்று மொழிகளை கற்பது கட்டாயமாக்கப்படுவதாக சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குத் தயாராவதற்கான அழுத்தம் 8-ஆம் வகுப்பிலேயே மாணவா்களுக்கு தொடங்கி விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு 9-ஆம் வகுப்புடன் மூன்றாவது மொழி கற்பதை நிறுத்த வேண்டுமே தவிர, அந்த வகுப்பில் இருந்து மூன்றாவது மொழியை கற்பது தொடங்கக் கூடாது. அவ்வாறு செய்வது மாணவா்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
புதிய சுற்றறிக்கையைப் பின்பற்றி மும்மொழி கற்பதை 6-ஆம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கருதினால், அதை அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தலாம்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய் பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இயின் புதிய சுற்றறிக்கையின்படி, மூன்று மொழிகளைக் கற்பதில் இருந்து நிகழாண்டு 6-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இயிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறு மதிப்பீட்டு வலைதளம்: மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மாணவா்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது - உச்சநீதிமன்றம்




