தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

உராங்குட்டான்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம்! இந்தோனேசியா சந்தேகம்!

ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 உராங்குட்டான்கள் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலா?

Five baby orangutans

உராங்குட்டான்கள் - TNIE

Published On :

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டும் வாழக்கூடிய அரிய வகை உயிரினமான உராங்குட்டான் எங்கள் நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்தோனேசியா இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

செப். 8 அன்று ஒடிசா மாநில வனப்பகுதியில் ஐந்து உராங்குட்டான் குட்டிகள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தோனேசிய அரசு இந்தியாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 உராங்குட்டான் குட்டிகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சர்வதேச அளவில் செயல்படும் வனவிலங்கு கடத்தல் கும்பல், இந்தக் குட்டிகளை இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வந்து இந்தியாவில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் கூறியது.

டிஎன்ஏ பரிசோதனை

மீட்கப்பட்ட உராங்குட்டான் குட்டிகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு இந்தோனேசிய அரசு இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில், இந்தோனேசியக் காடுகளைச் சேர்ந்தவை என்பது உறுதியானால், 5 உராங்குட்டான் குட்டிகளையும் சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக இந்தோனேசிய வனத்துறை தெரிவித்துள்ளது.

பின்னணியில் சர்வதேசக் கடத்தல்

இந்தியப் பூர்வீகமற்ற உராங்குட்டான்கள் எவ்வாறு ஒடிசாவுக்கு கொண்டுவரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து இந்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பணியகமும், ஒடிசா வனத்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மீட்கப்பட்ட உராங்குட்டான்கள் தற்போது ஒடிசாவின் புவனேஸ்வரில் நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் காலநிலை அதற்குப் புதிதாக இருந்தாலும், மெல்லப் பழகி வருவதாகவும், ஐந்து குட்டிகளும் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.