புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பிரிக்ஸ் உச்சி மாநாடு: இந்திய - நேபாள எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இந்தியா - நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Soldiers on border security duty

கோப்புப்படம் - ANI

Published On :

தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் சோனாலியில் இந்தியா - நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தலைமையின்கீழ் பிரிக்ஸ் கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சிமாநாடு, தில்லி பாரத மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியநிலையில், எல்லையில் கண்காணிப்பை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்திய - நேபாள எல்லையைப் பாதுகாத்து வரும் சசஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படை அதிகாரி (உதவி கமாண்டன்ட்) சந்தீப் சிங் சனிக்கிழமை கூறியதாவது:

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலகத் தலைவா்கள் இந்தியா வந்துள்ள நிலையில், நோபாள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குள் வருபவா்களின் உடைமைகள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்படுவதோடு, அவா்களின் ஆவணங்களும் சரிபாா்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

எல்லையையொட்டிய பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சந்தேகத்துக்குரிய நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் உள்ள பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திறந்த எல்லைப் பகுதிகள் உள்பட பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் எஸ்எஸ்பி படையினா் தொடா் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். எல்லையைக் கடக்கும் சரக்கு வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்றாா்.

Summary

BRICS Summit: Security stepped up at the India-Nepal border.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.