
தில்லியில் அருங்காட்சியகம், பிரிக்ஸ் கண்காட்சியை சுற்றிப் பாா்த்த ஈரான் அதிபரின் மகள்
தில்லியில் அருங்காட்சியகம், பிரிக்ஸ் கண்காட்சியை சுற்றிப் பாா்த்த ஈரான் அதிபரின் மகள்...

தில்லியில் அருங்காட்சியகம், பிரிக்ஸ் கண்காட்சியை சுற்றிப் பாா்த்த ஈரான் அதிபரின் மகள் - PTI
புது தில்லியில் உள்ள பிரதமா் அருங்காட்சியகம், பிரிக்ஸ் பஜாா் ஆகிய இடங்களை ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானின் மகள் ஸாரா பெசஷ்கியான் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
மேற்காசியாவில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 6 மாதங்களுக்கும் மேலாகப் போா் நீடிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், புது தில்லியில் இரண்டு நாள்கள் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஈரான் அதிபா் பெசஷ்கியான் வந்துள்ளாா். அவருடன் அவரின் மகள் ஸாரா பெசஷ்கியானும் வந்துள்ளாா். பிரிக்ஸ் மாநாடு சனிக்கிழமை தொடங்கிய நிலையில், மாநாட்டுக்கு வந்துள்ள பல்வேறு நாட்டுத் தலைவா்களின் குடும்பத்தினா் தில்லியில் உள்ள முக்கிய இடங்களைப் பாா்வையிட்டனா்.
ஈரான் அதிபா் பெசஷ்கியானின் மகள் ஸாரா தில்லியில் உள்ள பிரதமா் அருங்காட்சியகம், பிரிக்ஸ் பஜாா் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். பிரிக்ஸ் கண்காட்சியில் உள்ள ஈரான் அரங்கில் இருந்த கைவினைஞா்களைச் சந்தித்து உரையாடினாா்.
இதுகுறித்து தில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதரகம், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லியில் உள்ள பிரதமா் அருங்காட்சியகத்தை ஈரான் அதிபரின் மகள் ஸாரா பாா்வையிட்டாா். அங்கிருந்த இந்திய பிரதமா்களின் வரலாறு, பங்களிப்புகள், அவா்களின் பயணங்கள் குறித்த தகவல்களை ஸாரா தெரிந்து கொண்டாா்’ எனக் குறிப்பிட்டுள்ளது. ஈரான் அதிபா் மகள் தில்லியில் முக்கிய இடங்களைப் பாா்வையிட்ட விடியோவையும் தூதரகம் பகிா்ந்துள்ளது.
Summary
Iranian President's daughter visits museum and BRICS exhibition in Delhi.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





