தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராக தினேஷ் சர்மா பதவியேற்பு!

அந்தமான் - நிகோபார் தீவுகளின் 14வது துணைநிலை ஆளுநராக பதவியேற்ற தினேஷ் சர்மா பற்றி...

Dinesh Sharma sworn

தினேஷ் சர்மா - X

Published On :

அந்தமான் - நிகோபார் தீவுகளின் 14-வது துணைநிலை ஆளுநராக தினேஷ் சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள 'லோக் நிவாஸ் இல்லத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரவீந்திர விட்டல்ராவ் குகே, தினேஷ் சர்மாவுக்குப் பதவி மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவின்போது தலைமைச் செயலாளர் ஞானேஷ் பாரதி நியமன ஆணையை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் மூத்த அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வணிகச் சமூகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினேஷ் சர்மா தனது மனைவி ஜெய் லட்சுமி சர்மாவுடன் செப்டம்பர் 13ல் புது தில்லியிலிருந்து அந்தமான் தீவுக்கு வருகை தந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வராகவும், லக்னௌவின் மேயராகவும் இருந்த சர்மா, லக்னௌ பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் உயர்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பொறுப்பு வகித்தவர்.

பாஜகவைச் சேர்ந்த இவர், 2023-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக தினேஷ் சர்மாவை நியமிப்பதாக ஆளுநர் மாளிகை செப்டம்பர் 5 அன்று அறிவித்தது.

அக்டோபர் 8, 2017 முதல் துணைநிலை ஆளுநராகப் பணியாற்றிய அட்மிரல் டி.கே. ஜோஷிக்கு (ஓய்வு) பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.