யுபிஐ பரிவர்த்தனை: தனிநபர்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது; வணிகர்களுக்கு மட்டுமே! அமைச்சர்
யுபிஐ பணப் பரிவர்த்தனையில் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியது குறித்து...

யுபிஐ பரிவர்த்தனை / ஜோதிராதித்ய சிந்தியா - ஏஎன்ஐ
யுபிஐ பணப் பரிவர்த்தனையில் தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது என்றும் வணிகர்களுக்கு மட்டுமே இக்கட்டண விகிதம் பொருந்தும் எனவும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று (செப். 16) விளக்கம் அளித்தார்.
குடிமக்களோ அல்லது சாதாரண பயனர்களோ யுபிடி பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தபோது ஜோதிராதித்யா பேசியதாவது:
ஒரு தொழில்நுட்பமோ, அமைப்போ முழுமையாக தற்சார்புடையதாக இருக்க வேண்டுமெனில், அதுதன் சொந்த கால்களில் நிற்பதாக இருக்க வேண்டும். அனைத்து குழந்தைகளையும் போல கல்வி பெற்ற பிறகு அனுபவத்தை பெற்ற பிறகு குடும்பத்துக்கான பங்களிப்பை அளிப்பார்கள்.
இதன் அடிப்படையில் யுபிஐ பணப் பரிவர்த்தனையில் வணிக தள்ளுபடி விகிதம் 0.4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ரூ. 2000 வரை 0% கட்டணம் வசூலிக்கப்படும். மீண்டும் நான் கூறுகிறேன். ரூ. 2 ஆயிரம் வரை 0% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அதாவது 96% பரிவர்த்தனைகள் ரூ. 2 ஆயிரத்துக்கு கீழேதான் நடக்கின்றன. 4% பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் பொதுமக்களுக்கு விதிக்கப்படாது. அதாவது குடிமக்கள் அல்லது தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு இதில் கட்டணம் இல்லை. வணிகர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அதாவது மக்கள் கூடுதலாக ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டியதில்லை. இது சராசரி வாடிக்கையாளருக்கு எந்தவித மாற்றங்களையும் கொண்டிருக்காது எனக் குறிப்பிட்டார்.
Summary
No charges will be levied on customers for UPI transactions Jyotiraditya Scindia
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







