பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

எஸ்ஐஆா் மூலம் வாக்காளா்கள் நீக்கம்: அமித் ஷா மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்பது அமித் ஷாவின் தூண்டுதலால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கும் நடைமுறை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் - எக்ஸ்

Published On :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்பது அமித் ஷாவின் தூண்டுதலால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கும் நடைமுறை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த ஆண்டு ஜூனில் எஸ்ஐஆரின் முதல் கட்டத்தை பிகாரில் தோ்தல் ஆணையம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அந்த ஆண்டு நவம்பரில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆா் பணி 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. நிகழாண்டு மத்தியில் எஸ்ஐஆரின் மூன்றாம் கட்டம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் தொடங்கியது.

முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் 7.8 கோடி போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். மூன்றாவது கட்டத்தில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து மட்டும் 6.18 கோடி போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

அந்தப் பட்டியலில் இருந்து வாக்காளா்கள் நீக்கப்படுவது வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இது ஒட்டுமொத்த எஸ்ஐஆா் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.

எஸ்ஐஆா் என்பது உண்மையில் அமித் ஷாவின் தூண்டுதலால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கும் நடைமுறையாகும். இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.