
சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை! அமைச்சரின் பேச்சு சர்ச்சை!
லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை என பேசிய அமைச்சர் பற்றி...

சிவலிங்க கெளடா - Photo | Express
சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் எந்த தவறுமில்லை என்று கர்நாடக கலால் துறை அமைச்சர் சிவலிங்க கெளடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலால் துறை அமைச்சரும், அம்மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான சிவலிங்க கெளடா கலந்துகொண்டார்.
அப்போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்துவதாக அமைச்சரிடம் மக்கள் முறையிட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்தால், லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை. நீங்கள் வழங்க விரும்பினால், அதனை மரியாதையுடன் செய்யலாம். அது உங்கள் கடமை. ஆனால் யாரும் கட்டாயப்படுத்திப் பணத்தைப் பெறக்கூடாது” என்றார்.
அமைச்சரின் பேச்சை அடுத்து அப்பகுதியிலிருந்த மக்கள் உடனடியாக ”நாங்கள் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர். பலரும் அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உடனடியாக தனது கருத்தை மாற்றி, “நான் லஞ்சம் கொடுக்கச் சொல்லவில்லை. மரியாதைதான் கொடுக்கச் சொன்னேன்” என்றார்.
அமைச்சர் சிவலிங்க கெளடாவின் பேச்சை விமர்சித்துள்ள கர்நாடக பாஜக தெரிவித்திருப்பதாவது:
“லஞ்சம் கோரும் காங்கிரஸ் அரசின் உண்மையான முகத்தை அமைச்சர் சிவலிங்க கெளடாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது. லஞ்சம் கொடுப்பது ஒரு கடமை என்று கூறும் அமைச்சர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.
பணம் பறிப்பதே அரசின் ஒரே வேலை என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர். சாமானிய மக்களின் பணத்தை பறிப்பது சரி என்று கற்பிக்கும் காங்கிரஸுக்கு, மாநில மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
Summary
"There is nothing wrong with bribing officers who perform exceptionally well!" — Minister's remarks spark controversy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






