பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஐஐடி மாணவர் தற்கொலை; மனநலப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை!

மனநலப் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தது குறித்து...

ஐஐடி மும்பை - கோப்புப் படம்

Published On :

மனநலப் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்கள் திங்கள்கிழமை (செப். 21) கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐஐடி மும்பையில் சாஹில் வகோடே என்ற மாணவர் பி.டெக் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தேர்வின்போது, செல்போனில் ஏஐ பயன்படுத்தி தேர்வை எழுதியபோது, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் அந்த மாணவர் சிக்கியதாகக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறு மாணவர் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவருக்கு கல்வி நிறுவன ரீதியான துன்புறுத்தல்கள், சாதி பாகுபாடு, இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக பல கோரிக்கைகளை முன்வைத்து, வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாணவர்கள் பேசியதாவது:

இந்த விவகாரத்தில் மாணவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் உடன்படுகிறோம். அதவாது, மாணவர் நலப் பிரிவு, மனநல மருத்துவம் போன்ற சேவைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் மன நலப் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது மாணவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்.

பேராசிரியர் தூல்லா அற்பமான காரணங்களுக்காக மாணவர்களை இடைநீக்கம் செய்வதையும், அவர்களை விடுதிகளிலிருந்து நீக்குவதைம் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Summary

Students urged on Monday (Sept. 21) that greater attention be paid to mental health issues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.