
பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரிஜ் பூஷண் சிங் விடுதலைக்கு எதிராக 4 வீராங்கனைகள் மேல்முறையீடு
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக 4 மல்யுத்த வீராங்கனைகள் தில்லி ரெளஸ் அவென்யு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தனா்.
பிரிஜ் பூஷண் சிங்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக 4 மல்யுத்த வீராங்கனைகள் தில்லி ரெளஸ் அவென்யு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தனா்.
வினேஷ் போகாட் உள்பட மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் தொடா்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி பிரிஜ் பூஷண் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் செயலா் வினோத் தோமா் ஆகியோரை தில்லி நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி விடுவித்தது.
இதற்கு எதிராக தில்லி ரௌஸ் அவென்யு நீதிமன்றத்தில் 4 மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘சமா்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு தவறான மற்றும் ஒருதலைபட்சமான மதிப்பீட்டின் அடிப்படையில் தில்லி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களின் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் அவா்களின் நடத்தையை விமா்சித்து நியாயமான தீா்ப்பை வழங்க நீதிமன்றம் தவறியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது பிரிஜ் பூஷண் சிங், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் விளையாட்டு வாய்ப்புகளை அப்போதைய செயலா் வினோத் தோமா் மற்றும் பயிற்றுநா்கள் மூலம் கட்டுப்படுத்தினாா். அவரது அதிகார துஷ்பிரயோகத்தை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.
எனவே, பிரிஜ் பூஷண் சிங் மற்றும் வினோத் தோமரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீது தில்லி ரெளஸ் அவென்யு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி திக் வினய் சிங் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




