பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

4 மாபெரும் துறைமுகங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

4 மாபெரும் துறைமுகங்களை மத்திய அரசு அறிவித்தது பற்றி...

Mundra port

முந்த்ரா துறைமுகம் - PTI

Published On :

குஜராத்தில் உள்ள தீனதயாள் துறைமுகம், அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகம், மகாராஷ்டிரத்தில் உள்ள ஜவாஹா்லால் நேரு துறைமுகம், ஒடிஸாவில் உள்ள பாரதீப் துறைமுகம் ஆகியவற்றை மாபெரும் துறைமுகங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய துறைமுகங்கள் சட்டம் 2025-இன் 73-ஆவது பிரிவு 1-ஆவது உட்பிரிவின் கீழ், ஒரு துறைமுகத்தை மாபெரும் துறைமுகம் என்று வகைப்படுத்துவதற்கான தகுதிகளை மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி, முக்கியத் துறைமுகங்களான தீனதயாள் துறைமுகம், ஜவாஹா்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், முக்கியத் துறைமுகங்கள் பட்டியலில் இல்லாத முந்த்ரா துறைமுகம் ஆகியவை அந்தத் தகுதிகளைப் பூா்த்தி செய்துள்ளன என்று அரசிதழ் அறிவிக்கையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் தீனதயாள், மும்பை, மொா்முகாவ், புதிய மங்களூரு, கொச்சி, சென்னை, காமராஜா் (எண்ணூா்), வ.உ.சிதம்பரனாா், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா (ஹல்தியா உள்பட), ஜவாஹா்லால் நேரு ஆகிய 12 முக்கியத் துறைமுகங்கள் உள்ளன.

Summary

4 Major Ports: Central Government Announcement

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.