பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

மத்திய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அரசுக்கு ரூ. 2.88 லட்சம் கோடி கூடுதல் செலவினம்

மத்திய உள்கட்டமைப்புத் திட்டங்கள்: அரசுக்கு ரூ. 2.88 லட்சம் கோடி கூடுதல் செலவினம்

Published On :

மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி ரூ.2,88,122 கோடிக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக அரசின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

தலா ரூ.150 கோடிக்கும் அதிக மதிப்பிலான 1,731 திட்டங்களின் அசல் மதிப்பீடு ரூ.30,71,947 கோடியாக இருந்த நிலையில், தற்போது அவற்றின் திருத்தப்பட்ட மொத்த மதிப்பு ரூ.33,60,069 கோடியாக அதிகரித்துள்ளது.

17 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த 1,731 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக இதுவரை ரூ.16.33 லட்சம் கோடி (திருத்தப்பட்ட மதிப்பில் 48.59 சதவீதம்) செலவிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு வாரியாக...: மொத்த திட்டங்களில், ரூ.1,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய 715 மெகா திட்டங்களும் (அசல் மதிப்பு ரூ. 25.89 லட்சம் கோடி), ரூ. 150 கோடி முதல் ரூ. 1,000 கோடி வரையிலான 1,016 முக்கிய திட்டங்களும் (ரூ.4.83 லட்சம் கோடி) அடங்கும்.

அமைச்சகங்கள் வாரியாக...: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிகபட்சமாக 982 திட்டங்களுடன் (57 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது. இதன் திருத்தப்பட்ட திட்ட மதிப்பு ரூ.9.52 லட்சம் கோடியாகும் (28 சதவீதம்). இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே அமைச்சகம் ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பீட்டில் 147 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதேபோல், நிலக்கரி அமைச்சகம் 122 திட்டங்களையும் (ரூ.2.22 லட்சம் கோடி), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 117 திட்டங்களையும் (ரூ.4.42 லட்சம் கோடி), மின்சார அமைச்சகம் 102 திட்டங்களையும் (ரூ.6.18 லட்சம் கோடி) செயல்படுத்துகின்றன.

வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 49 திட்டங்களையும் (ரூ.3.41 லட்சம் கோடி), நீா்வளத் துறை 38 திட்டங்களையும் (ரூ.2 லட்சம் கோடி) கொண்டுள்ளன. எஞ்சிய 174 திட்டங்கள் (ரூ.2.71 லட்சம் கோடி) உயா்கல்வி, சிவில் விமானப் போக்குவரத்து, எஃகு, தொலைத்தொடா்பு, துறைமுகங்கள், சுகாதாரம் உள்ளிட்ட பிற துறைகளின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Summary

Central Infrastructure Projects: Additional Expenditure of Rs 2.88 Lakh Crore for the Government

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.