மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

பணி நியமன முறைகேடு வழக்கு! அமலாக்கத் துறை விசாரணைக்கு ஹரிஷ் ராவத் ஆஜர்!

2016 பணிநியமனத் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு பற்றி..

Former Uttarakhand CM Harish Rawat

ஹரிஷ் ராவத் - X

Published On :

உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத் 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற பணிநியமனத் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக டேராடூனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அலுவலகத்திற்குள் நுழையும்போது, ​​ராவத் தனது தாயாரின் புகைப்படத்தைக் கழுத்தில் அணிந்திருந்தார்.

விசாரணைக்கு முன்னதாக, விசாரணைக்காக ஆஜராகுமாறு இரண்டு நாள்களுக்கு முன்பே அமலாக்கத் துறையிடமிருந்து தனக்கு அழைப்பாணை வந்ததாகக் கூறும் காணொலி ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.

உத்தரகண்ட் துணைப் பணிகள் தேர்வு ஆணையத்தால் (யுகேஎஸ்எஸ்எஸ்சி) 2016-இல் நடத்தப்பட்ட கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பணி நியமனத் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வழக்கு இதுவாகும்.

இவ்விவகாரம் தொடர்பாக, செப்டம்பர் 10-ஆம் தேதி டேராடூனில் உள்ள பல இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், ராவத்தின் தற்போதைய தனிப்பட்ட உதவியாளரும், அவர் முதல்வராக இருந்தபோது சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றிய வருமான சந்தன் சிங் ஜீனாவின் இல்லமும் அடங்கும்.

அமலாக்கத் துறை தன்னிடம் ஏராளமான ஆவணங்களைக் கோரியுள்ளதாக ராவத் தனது காணொலியில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, அவரது கடந்தகால வருமான வரித் தாக்கல் விவரங்கள், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமான சொத்துக்கள் குறித்த விவரங்களை அமலாக்கத் துறை கோரியிருந்தது.

அமலாக்கத் துறை அலுவலகத்திற்குச் செல்வது குறித்து யாருக்கும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. தனது தனிப்பட்ட உதவியாளரின் வீட்டில் ரொக்கப் பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக செப்டம்பர் 12-ஆம் தேதி ராவத் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.