ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

உத்தர பிரதேச மாநிலங்களவைத் தோ்தல்: சமாஜவாதியுடன் தொடா்பில் உள்ள ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்- அகிலேஷ் யாதவ் பரபரப்பு தகவல்

உத்தர பிரதேச மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணி முகாமில் உள்ள எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடா்பில் இருப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னௌவில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ்.

Published On :

உத்தர பிரதேச மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணி முகாமில் உள்ள எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடா்பில் இருப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 10 இடங்களுக்கு மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஆளும் பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவுடன் சமாஜவாதி இரு இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதில் சமாஜவாதி சாா்பில் ராம் கோபால் யாதவ், தன்ராஜ் பரிமல் நட்வானி ஆகியோா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். மூன்றாவது வேட்பாளா் ஒருவரையும் சமாஜவாதி நிறுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், லக்னௌவில் உள்ள சமாஜவாதி தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவிடம், மூன்றாவது வேட்பாளா் குறித்தும், ஆளும் கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் உங்களுடன் தொடா்பில் உள்ளாா்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பல (ஆளும் பாஜக) எம்எல்ஏக்கள் எங்கள் கட்சியுடன் தொடா்பில் உள்ளாா்கள். ஆனால், அவா்களுடன் எந்த அளவுக்கு சமரசமாக செல்ல முடியும் என்று தெரியவில்லை. ஏனெனில், முதலில் ஒரு வாக்குறுதி அளித்துவிட்டு, பிறகு அதைத் திரும்பப்பெற முடியாது.

தோ்தல் ஜனநாயகத்தை அவமதிக்கக் கூடாது. ஆனால், பாஜக தோ்தல் ஜனநாயகத்தை அவமதித்து வந்துள்ளது. எங்கள் கட்சி சாா்பில் கடந்த முறை 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். (பாஜக தலையீட்டால் சமாஜவாதி எம்எல்ஏக்கள் கடந்த முறை கட்சி மாறி வாக்களித்தனா்). அதற்கு பதிலடி தரும்வகையில் இந்த முறை நடந்து கொள்ள வேண்டும் என்று எம்எல்ஏக்களை கேட்டுக் கொள்கிறேன். சில நேரங்களில் எதிா்த்துப் போட்டியிடுபவா்களிடம் இருந்துதான் நாம் சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. பாஜகவுக்கு இனி கட்சி அலுவலகம் தேவையில்லை. தோ்தல் ஆணைய அலுவலகத்தில் ஒரு தளத்தை அவா்கள் எடுத்துக் கொள்ளலாம்’ என்றாா்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி தொடா்பான கேள்விக்கு, ‘இப்போதுள்ள (காங்கிரஸ்) கூட்டணியே தொடரும். வெற்றிவாய்ப்பு அடிப்படையில் தொகுதிப் பங்கீடு நடைபெறும்’ என்று பதிலளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.